விடைபெற்றார் மோர்கன்..!

இங்கிலாந்தின் ODI உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயோன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
35 வயதான மோர்கன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தார், இங்கிலாந்து அணிக்கு முதல் ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்றவர் மோர்கன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோர்கன் அடித்த 7701 ODI ரன்களில், 6957 ரன்களை அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு 2009 இல் மாற்றிய பிறகு எடுக்கப்பட்டது.
அவர் அடித்த 14 ஒருநாள் சதங்களில் 13 இங்கிலாந்துக்காக அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 115 போட்டிகளில் விளையாடி 136.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 2458 ரன்கள் குவித்துள்ளார்.