மிரட்டல் வெற்றி பெற்ற இந்திய அணி. தொடரையும் கைப்பற்றியது.
அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மிரட்டல் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி.20 போட்டி டப்லினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தீபக் ஹூடா 104 ரன்களூம், சஞ்சு சாம்சன் 77 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 225 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றீ என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய அயர்லாந்து அணி, போட்டியின் முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் குவித்தது.
அந்த அணியின் துவக்க வீரர்களான பால்பிர்னே 60 ரன்களும், பவுல் ஸ்டிரிங் 40 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய டெக்டர் 39 ரன்களும், அதிரடியாக விளையாடிய டாக்ரல் 34 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை அயர்லாந்து அணி வந்தது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரை வீசிய உம்ரன் மாலிக், அந்த ஓவரில் ஒரு நோ பால் வீசினால் மற்ற பந்துகளை சரியாக வீசி, 12 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்ததன் மூலம் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் டி.20 தொடரையும் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.