அரசு மீது நம்பிக்கையை இழந்துள்ளது சர்வதேசம் – சு.க. சுட்டிக்காட்டு.

தற்போதைய அரசின் மீது தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக நம்பகத்தன்மை இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையைத் தீர்த்துக்கொள்ள வெளிநாடுகளின் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் மிகவும் அவசியம். அதற்கு முன்னர் சர்வதேசத்திடம் நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காக சர்வகட்சி அரசை நியமிக்க வேண்டும். இந்தச் செயற்பாடு உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்” – என்றார்.