மகாராஷ்டிரா அடுத்த முதல்வர் யார்?- இரவு முழுவதும் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்கள்
மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலகியுள்ள நிலையில் நேற்று இரவு முழுவதும் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்தன. அடுத்த முதல்வரை முடிவு செய்ய பாஜக மற்றும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு விலகினார். இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவில் இரவு முழுவதுமே அடுத்தடுத்து பல்வேறு அரசியல் திருப்பங்கள் நடந்தன.
1.இரவு 9.30 மணிக்கு தொடங்கிய தனது முகநூல் நேரலையில் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
2. தாக்கரே தானே ராஜ்பவனுக்கு காரில் சென்றார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே உடன் சென்றார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் நள்ளிரவில் சமர்ப்பித்தார்.