ஆஸ்திரேலியாவிலிருந்து 46 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தல்.

ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.
அண்மையில், இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகப் படகு மூலம் பயணித்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட குறித்த இலங்கையர்கள், ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.
இதையடுத்து, நாடு கடத்தப்பட்ட அவர்கள், ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம், இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சிலாபத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.