கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் மாற்றம் வேண்டும்- சித்தார்த்தன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டும் என நான் விரும்பவில்லை. ஆனால் பேச்சாளர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் மாற்றம் வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கோரியிருந்தது. புளொட்டும் அதைத்தான் விரும்புகிறது.

கூட்டமைப்பின் பேச்சாளர் மீது கடந்த காலங்களில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. அத்தோடு ஆரம்பகாலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் வசமிருந்த பேச்சாளர் பதவி பின்னர் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட்டது. அது போல இம்முறை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, ளொட்ஆகிய இரு கட்சிகளில் ஒரு கட்சிக்கு வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை, என்றார்.

Leave A Reply

Your email address will not be published.