கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ – 135 ஏக்கர் பரப்பளவு எரிந்து நாசம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. ரெட்வுட் சானிட்டரி லாண்ட்ஃபில் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அங்கு சுற்றுச்சூழல் பெரும் மாசடைந்துள்ளது.
இந்த காட்டுத்தீயால் கலிபோர்னியாவின் வான்வெளி முழுவதும் அடர் செந்நிறமாக மாறியதுடன் புகை மண்டலமாகவும் காட்சியளிக்கின்றன. காடுகள் கருகி சாம்பலாகியுள்ள நிலையில், இதுவரை 75 சதவீத காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.