விவசாய மின் இணைப்புக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிக பிரிவுகளில் மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் விவசாயத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழந்தது. இதனால், தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஏற்ப ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், நேரடி விண்ணப்ப பதிவில் தவறுகள் நடக்கின்றன. எனவே, விவசாய மின் இணைப்புக்கும், இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை, மின் வாரியம் இன்று முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.