2 பிள்ளைகளுடன் ஆற்றில் பாய்ந்த தாயும் உயிரிழப்பு!

32 வயதான தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய ‘சந்திரிகா’ ஆற்றில் இன்று காலை குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குறித்த பெண்ணும் அவரது 11 வயது மகனும் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு, எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், 5 வயதான மகள் சடலமாகவே மீட்கப்பட்டார்.
இந்தநிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த தாய், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார்.
மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.