பிரமாண்டமாக உருவாகும் வின்னர் 2.

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து பிரசாந்த், வடிவேல் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்ததை அடுத்து வின்னர் இரண்டாம் பாகம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கூறுகையில், “அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார். இந்த தகவலினால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.