பழங்குடியின பெண்ணுக்கு பிரசவம் பார்க்க லஞ்சம் வாங்கிய மருத்துவர்
இந்திய மாநிலம் மத்தியப் பிரதேசத்தில், பழங்குடியின பெண்ணின் குழந்தையை பிரசவிக்க லஞ்சம் வாங்கிய அரசு பெண் மருத்துவர் சிக்கினார்.
தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்ட நேற்றைய தினத்தில் (வெள்ளிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பழங்குடியினப் பெண்ணின் குழந்தையைப் பெற்றெடுக்க ரூ. 6,000 லஞ்சம் பெற்றதாக மகளிர் மருத்துவ நிபுணர் மற்றும் அவரது உதவியாளர் வசமாக சிக்கியுள்ளனர்.
சர்தார்பூரில் உள்ள சமூக நல மையத்தில் மகளிர் மருத்துவ நிபுணரான டாக்டர் சங்கீதா படிதார் (55) அவரது உதவியாளர் பூஜா பபாரியா (26) உதவியுடன் லஞ்சம் வாங்கியதற்காக லோக்ஆயுக்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக லோக்ஆயுக்தா துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பிரவீன் சிங் பாகேல் தெரிவித்தார்.
உதவியாளர் பூஜா பபாரியா மருத்துவர் சங்கீதா படிதார் சார்பில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து லஞ்சம் பெறுள்ளார்.
ஜூன் 27 அன்று நடந்த இந்த சம்பவத்தில், பழங்குடிப் பெண்ணின் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக மருத்துவர் படிதார் ரூ. 10,000 கேட்டதாகக் கூறப்படுகிறது, மேலும் குடும்பத்துடன் பேரம் பேசிய பிறகு, இறுதியாக ரூ.8,000-க்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் ரூ. 6,000 வாங்கிக்கொண்ட நிலையில், பிரசவ நாளில் அவளுக்கு ரூ.2,000 கொடுக்க வேண்டும் கூறியதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இருவர் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.