மலையகத்தில் தொடரும் சோகம் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பரிதாப உயிரிழப்பு.

பொகவந்தலாவை மேல் பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற 4 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். .
இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது எனப் பொகவந்தலாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ கீழ்ப் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளான மூவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.