பிரச்சினையைத் தீர்க்கச் சென்ற இளைஞர் வாள்வெட்டில் மரணம்.

அயல் வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காலி, நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பலத்த காயங்களுக்குள்ளான அவர், மெதகம வைத்தியசாலையில் சேர்க்ககப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.