சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா.

மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நவ நாள் ஆராதனைகளைத் தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியைக் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியைத் தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம்பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.

மடு அன்னையின் அருளைப் பெறுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://wetransfer.com/downloads/df5c1435814ea848db0cdd600c0f62b120220702045503/b6d790bb435f608cec827cc28fce9bf420220702045520/09b19c

 

Leave A Reply

Your email address will not be published.