விமானங்களுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம்!
கொழும்பு: எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
விமான எரிபொருள் கையிருப்பு தீர்ந்துவிட்டதால் எரிபொருள் விநியோகம் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.
இதன் காரணமாக இலங்கைக்கு வரும் விமான சேவை நிறுவனங்களுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு இலங்கைக்கு வருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைக்காக விமான எரிபொருள் மிகக் குறைந்த அளவே கையிருப்பில் இருப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
விமான எரிபொருள் நெருக்கடி தொடர்பாக, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு, பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களுடன் இன்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருள் இருப்புக்களை வழங்குவதாக பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் காரணமாக, சில விமான நிறுவனங்களின் விமான சேவைகள் மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.