நோர்வே அரசின் முக்கியஸ்தருடன் சாணக்கியன் எம்.பி. நேரில் சந்திப்பு இலங்கை நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்.

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியாவுக்கான பிரதிப் பணிப்பாளருக்கும் (Sigbjorn Tenfjord) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சாணக்கியன் எம்.பி. நோர்வேக்கு விஜயம் செய்துள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பிலும், இவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.