சபாநாயகரது கடந்த கால அரசியலை நினைவுக்கு கொண்டு வந்த மனோ
9ம் நாடாளுமன்ற முதல் நாள் (20) – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவராக, சபாநாயகருக்கு வாழ்த்துரையில் அவரது கடந்த கால அரசியல் வாழ்வை பா.உ. மனோ கணேசன் மீட்டி பேசி வாழ்த்தியுள்ளார்.
அவரது உரையின் போது ,
சபாநாயகர் அவர்களே!
இந்நாடு பல மொழிகள் பேசப்படும், பல இனங்கள் வாழும், பல மதங்கள் கடைபிடிக்கப்படும் நாடு.
இந்த யதார்த்தம் இந்த சபையில் இன்று சிறப்பாக பரிணமிக்கின்றது. ஒளிருகின்றது.
இந்த பரிணமைப்பையும், ஒளிர்வையும் நீங்கள் கட்டி காப்பீர்கள் என நான் நம்புகிறேன்.
2013 வருடத்தில் நீங்கள் ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டீர்கள்.
உங்களது பாராளுமன்ற வரலாறு வர்ணமயமானது.
கலாச்சாரம், விவசாயம் ஆகிய விவகார அமைச்சுகளை நீங்கள் வகித்துள்ளீர்கள்.
ஐதேக எம்பியாக நீங்கள் பாராளுமன்றத்திற்குள் முதலில் தெரிவு செய்யப்பட்டீர்கள்.
நீங்கள் மனசாட்சியை மதிப்பவர். ஆகவே அன்று உங்களது அரசாங்கத்துக்கு எதிராகவே நீங்கள் உங்கள் மனசாட்சியின்படி வாக்களித்துள்ளீர்கள்.
இந்த சபைக்கு மனசாட்சியின்படி காவலனாக நீங்கள் செயற்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.
உங்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி. வணக்கம் என்றார் அவர்.