இரட்டைக் கொலை சூத்திரதாரி பொலிஸாரால் சுட்டுக் கொலை.

கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தையில் கடந்த மே மாதம் துப்பாக்கிச்சூடு நடத்தி இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் கம்பஹா – பெம்முல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சந்தேகநபர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.
சந்தேகநபரை கைதுசெய்யச் சென்றபோது, அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்துப் பொலிஸார், அவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.
பின்னர், சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுப் பொலிஸாரை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் பதிலுக்குப் பொலிஸாரும் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகியுள்ளார்.
40 வயதுடைய இஹல வித்தானகே ஜோஸப் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.