இலங்கை அகதிகளைப் பாதுகாப்பாக மீட்க தனுஷ்கோடியில் படகுகளை நிறுத்துங்கள்.

இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பாதுகாப்பாக மீட்க தனுஷ்கோடியில் கரையோரப் பொலிஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைகளில் இறங்குகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கரையோரப் பொலிஸாருக்குச் சொந்தமான படகுகள், தனுஷ்கோடியில் ரோந்து செல்லவும், இலங்கையிலிருந்து வரும் அகதிகளைப் பாதுகாப்பாக மீட்கவும் தனுஷ்கோடி இறங்குதளத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று ‘த ஹிந்து’ செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.