“நமது அம்மா” நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..
“நமது அம்மா” நாளிதழின் வெளியீட்டார் சந்திர சேகர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கோவை வடவள்ளியில் உள்ள அவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் சேதனை நடத்தி வருகின்றனர். இதேபோல, சந்திர சேகரின் தந்தை வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனை காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதிகாரிகள் 6 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திர சேகர், பல்வேறு தொழில்களையும், கான்ட்ராக்ட் தொழில்களையும் செய்து வருகிறார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38 வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகின்றார். ஆலயம் டிரஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளையும் நடத்தி வருகின்றார். சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.