22’ஆம் திருத்தம்: எதிர்ப்பது யார்? – சபையில் அம்பலப்படுத்தினார் விமல்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சவின் சகாக்களே அரசமைப்புக்கான 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கின்றனர் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் முழுமையாகத் திருப்திகொள்ள முடியாவிட்டாலும், அதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சில விடயங்களும் உள்ளன. எனவே, அதனை ஆதரிக்க வேண்டும். எனினும், பஸில் ராஜபக்சவைப் பாதுகாக்க முற்பட்டவர்களே 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்க்கின்றனர்” – என்றார்