யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவனின் புதிய கண்டுபிடிப்பு.

யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கலப்பு வகையில் சைக்கிள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
இன்றைய எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாகப் போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் சாதாரண சைக்கிளைப் பற்றரியின் துணையோடு இயங்கவைக்கும் ஹைபிரிட் சைக்கிளாக அவர் மாற்றியுள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்புக்காக மீள் சுழற்சிப் பொருட்களையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
இதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று ஹாட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் நடைபெற்றது.
ஹாட்லிக் கல்லூரியின் இளம் கண்டுபிடிப்பாளர் கழகத்தின் தலைவர் இராஜ. அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்லூரி அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இதில் கல்லூரி உப அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.