மிகப் பிரபலமான கட்சியே ஜே.வி.பி. அமெரிக்கத் தூதுவர் அதிரடிக் கருத்து.
இலங்கையைப் பொறுத்தவரை ஜே.வி.பி. ஒரு பாரிய பிரசன்னத்தைக் கொண்ட பிரபலமான ஒரு கட்சியாகும் என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்தார்.
நேற்று ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு ஒன்றின்போது அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் அண்மையில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியைச் சந்தித்தமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்தச் சந்திப்பை அடுத்து ஜே.வி.பியுடன் நல்ல புரிதல் உள்ளது என்பதை அறிந்தேன். ஜே.வி.பி பொருத்தமான அரசியல் கட்சியாகும்” – என்றார்.