போராட்டக்காரர்கள் எவரையும் அரச படைகள் அடக்கக்கூடாது! பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று அமெரிக்கத் தூதர் ‘ருவிட்’.
“அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என்று நினைவூட்டுகின்றேன்.”
இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ட்விட்டரில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக நாளை கொழும்பில் மாபெரும் மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், முக்கிய இடங்களில் பொலிஸாரும், படையினரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக சமூக ஊடகங்களில் மனித உரிமை செயற்பாட்டார்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கத் தூதுவர் தனது ருவிட்டரில்,
“வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. நீங்கள் போராட்டம் நடத்தப் போகின்றீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்துகொள்ளுங்கள்.
மேலும், அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் பொலிஸார் இடமளிக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பையும் வழங்கவேண்டும் என்று நினைவூட்டுகின்றேன்.
குழப்பமும், பலப்பிரயோகமும் தற்போதைய நிலையில் இலங்கையர்களுக்குப் பொருளாதாரம் அல்லது அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வராது” – என்று பதிவிட்டுள்ளார்.