நாமலின் மனைவி பிள்ளைகள் இருவரும் பிரான்ஸ் சென்றனர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ஷ , அவரது குழந்தையுடன் இன்று காலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் பிரான்ஸ் செல்வதற்காக லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வருகை தந்திருந்தார்.


அதே சமயம் தனது மனைவியின் வெளிநாட்டுப் பயணத்தை செய்தியாக்க வேண்டாம், பொழுதுபோக்காக வெளிநாடு செல்வதாக முன்னாள் அமைச்சர் திரு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது மனைவியும் குழந்தையும் பிரான்ஸ் செல்வதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனது மனைவி சுற்றுலாத் தொழில் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.