கோட்டா – ரணில் அரசுக்கு எதிரான பல்கலை மாணவர்களின் பேரணி! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில் இன்று மாலை போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசை உடனடியாகப் பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்துக்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கொழும்பு – கோட்டை நோக்கிப் பேரணியாகச் செல்கின்றனர்.
மேலும், மாணவர்கள் அங்கு இன்றிரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.