இலங்கையில் மருந்தகங்கள் நாளை மூடப்படும்!

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து மருந்தகங்களும் நாளை (9) மூடப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் நாளை முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக மருந்தகங்கள் மூடப்படவுள்ளதாக சங்கம் மேலும் குறிப்பிடுகிறது.