ஜனாதிபதி கோட்டாபய , நாட்டை விட்டு வெளியேற உள்ளார்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாளையும் நாளை மறுதினமும் கொழும்பில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக அவர் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி தற்போது இலங்கையில் இருப்பதாகவும் அவர் வெளிநாடு செல்ல தயாராக இல்லை எனவும் ஜனாதிபதியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகக் கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.