அனைத்து வகையான தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு

இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலிஸ்டா் தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

கையால் நெய்த பஞ்சு, பட்டு, காதி தேசியக் கொடிகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட தொடக்கத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் மூவா்ணக் கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதற்காக இயந்திரத்தில் உருவாக்கப்படும் பாலியஸ்டா் துணியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடிகளுக்கும் அனுமதி அளித்து இந்திய தேசியக் கொடி-2002 சட்டத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பரில் திருத்தம் கொண்டு வந்தது.

இந்த இயந்திர பாலியஸ்டா் தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.