எதிர்கட்சி பிரதம அமைப்பாளராக லக்ஸ்மன் கிரியல்ல

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக (எதிர்க் கட்சி முதற்கோலாசான்) பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நேற்றையதினம் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக தெரிவானார். அதனையடுத்து லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.