ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும்! : சஜித் பிரேமதாச
கோட்டாபய ராஜபக்சவும், தற்போதைய பிரதமரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கோரி வருவதால், ரணில் அழைக்கும் பேச்சுவார்த்தையில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். விக்ரமசிங்க, தற்போது சட்ட விரோதமாக பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் மூலையில் தள்ளியிருந்த ராஜபக்சேக்களை மீண்டும் அரசியல் களத்தில் இறக்கி பத்திரப்படுத்தி போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர் தற்போதைய பிரதமர் என்பதுடன் இந்த நெருக்கடியில் அவரும் பிரதிவாதி என்பது குறிப்பிடத்தக்கது.
எதேச்சதிகார, அடக்குமுறை, ஜனநாயக விரோத அரசாங்கத்தின் முடிவு இப்போது கண்ணுக்குத் தென்படுகிறது, குதிரை ஓடிப்போன பிறகு மூடிய லாயத்தில் வெற்று விவாதங்களில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை.
இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எமது மாண்புமிகு தாய்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒரே இலக்கில் ஒன்றுபட்டுள்ள இவ்வேளையில், அந்த இலட்சியத்தின் வெற்றி காணக்கூடிய வேளையில், பிரதமர் என்று அழைக்கப்படுபவர்களின் வீண் பேச்சுவார்த்தைகள் சுற்றில் ராஜபக்சக்களின் பாதுகாப்பு மீண்டும் உறுதிசெய்ய வழி செய்யும். எனவே முழு அரசும் ராஜினாமா செய்ய வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாவலர்களுடனும், காவலர்களுடனும் நாட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்க விரும்பவில்லை, நின்ற அனைத்து தரப்பினருடனும் இணைந்து இந்த நாட்டை அராஜகத்திலிருந்து விடுவித்து மக்கள் போராட்டத்துடன் மீண்டும் கட்டியெழுப்ப பங்களிப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். .
சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர்