13 ஜனாதிபதி பதவி விலகுகிறார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதால் நாட்டில் மேலும் அமைதியின்மை ஏற்படக் கூடாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (9) மாலை பதவி விலக தீர்மானித்திருந்தமையினால், ஜனாதிபதி முதலில் பதவி விலகினால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானாகவே பதில் ஜனாதிபதியாகிவிடுவார் என்பதனால், உத்தியோகபூர்வ அறிவிப்பு மேலும் தாமதமாகி வருகின்றது.
இதன்படி, பதவி விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி தாமதம் செய்து, நியமனத்தை தடுக்கிறார்.