தேர்தல் பிரசாரத்தில் ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய கமலா ஹரிஸ்
கமலா ஹரிஸ் தனது தேர்தல் பிரசாரத்தின் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹரிஸ் தனது உரையின் போது சென்னையில் பிறந்து வளர்ந்த தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.
இதுபற்றி அவர் கூறுகையில், இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும்.
தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா. அவரின் தோள்களில்தான் நான் நின்றுக்கொண்டிருக்கிறேன். குடும்பம், குடும்ப உறவுகள், சமுதாயக்கடமை குறித்து எனது தாய் எனக்கு சிறுவயது முதல் போதித்துள்ளதார்’ எனக் கூறினார்.
கமலா ஹரிஸ் தன் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் இந்திய மொழியில் அதுவும் தமிழில் ‘சித்தி’ என்று குறிப்பிட்டது, அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் குறிப்பாக, தமிழர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கமலா ஹரிசின் இந்த பேச்சு டுவிட்டரில் வைரலாகியுள்ளது.
பலரும் அவரது பேச்சை டுவிட்டரில் பகிர்ந்து பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன், அமெரிக்கர்கள் பலர், ‘சித்தி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை இணையதளத்திலும் தேடி வருகின்றனர்.