அடுத்தகட்டம் தொடர்பில் இன்று முக்கிய கூட்டங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
சர்வகட்சி அரசு சம்பந்தமாக இதன்போது விரிவாக அலசி ஆராயப்படவுள்ளது.
அத்துடன், விமல் வீரவன்ச, வாசுதேவ உட்பட 9 சுயாதீனக் கட்சிகளின் கூட்டமும் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உட்பட மலையகக் கட்சிகள் சர்வகட்சி அரசுக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளன.