இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 3.34 கோடியாக உயர்வு
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்றைய தினம் மாத்திரம் 8.05 இலட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
நேற்றைய தினம் வரை 3,34,67,237 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 8,05,985 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐ.எம.சி.ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29.05 இலட்சமாக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54,849 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 21,58,947 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள அதே வேளை உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 74.3 சதவீதமாகவும் உள்ளது.