இராணுவத் தலைமையகத்துக்குள் கோட்டா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது இராணுவத் தலைமையகத்துக்குள் உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் உயர்மட்டத்தைக் கோடிட்டு வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றிய பின்னர், தாம் எதிர்வரும் 13ஆம் திகதியன்று பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் நெருக்கடி நிலைமை மோசமடைந்ததையடுத்து, தாம் பதவி விலகத் தயாராக இருக்கின்றார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்திருந்தார்.