தேவைப்பட்டால் ராஜபக்சக்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கலாம்.

இலங்கையில் ராஜபக்சக்களுக்குத் தேவைப்பட்டால் இராணுவ உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச இருவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஜனநாயக முறையில் தேர்தல் ஊடாகத் தெரிவானவர்கள். அவ்வாறு இருக்க அவர்களின் ஆட்சியை எவ்வாறு ஒரு கும்பலால் கவிழ்க்க முடியும்?
அப்படி நடக்குமானால் நமது சுற்றுப்புறத்தில் எந்தவொரு நாடும் பாதுகாப்பாக இருக்க முடியாது” – என்றுள்ளது.