சஜித் தலைமையில் ‘சூம்’ வழியாகவும் நேரடியாகவும் முக்கிய பேச்சுக்கள்.
சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் கொழும்பில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கையின் தற்போதைய சூழலில் கோட்டா – ரணில் அரசை நீக்கி சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு இடம்பெறும் பேச்சுக்களில் கோட்டா – ரணில் அரசு மக்களின் கோரிக்கைக்கமைய பதவி விலகி மாற்று அரசை அமைக்க அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தலைவர்களிடம் சஜித் பிரேமதாஸ கோரி வருகின்றார் எனத் தெரியவருகின்றது.
இதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக மறுத்தாலும் 113 பேரின் ஆதரவுடன் இருப்பவர் பிரதமராக முடியும் என்பதன் அடிப்படையிலும் ஆதரவு தேடல் முயற்சி இடம்பெற்று வருகின்றது.
இந்த முயற்சி ‘சூம்’ வழியாகவும் நேரடியாகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்தப் பேச்சுக்களில் பல கட்சிகள் ஆதரவைத் தெரிவிக்கின்ற போதிலும் சில கட்சிகள் நிபந்தனைகளை மட்டுமே தெரிவித்து வருகின்றன.