நான் ஏற்கனவே கூறியவாறு ‘ஜூலை 13’ பதவி துறப்பேன் ரணிலிடம் கோட்டா தெரிவிப்பு.

தான் முன்னர் அறிவித்தவாறு குறித்த திகதியில் பதவி விலகுவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி தான் பதவி விலகுவேன் என்று தன்னிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று நேற்றுமுன்தினம் இரவு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரையில் தாம் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.