சஜித்தே மாற்றுப் பிரதமர் – ராஜித அதிரடி அறிவிப்பு.
“மக்களின் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டத்தால் நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுப் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே இருக்கின்றார்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எந்தவொரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவரையே மாற்றுப் பிரதமராகக் கருதுவார்கள். இதனாலேயே இராஜதந்திரிகள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவரையும் சந்திக்கின்றனர்.
இதன்படி தற்போது இலங்கையின் மாற்றுப் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவே இருக்கின்றார். அவருடன் இணைந்து பயணிக்க அனைவரும் தயாராக வேண்டும்.
இது தொடர்பான நடவடிக்கைகளை நாடாளுமன்றம் முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.