கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம் (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நாட்டை விட்டு வெளியேறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சபாநாயகர் இதனைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடல் போராட்ட களத்தில் இருந்த மக்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

அதற்கு முன்னரே, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பசில் ராஜபக்ஷவும் திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

நேற்றிரவு கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் நேற்றுக் காலை கடற்படைத் தளத்திற்குள் பிரவேசித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு வந்து , கெலியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்தவர், டுபாய் செல்ல நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிய வருகிறது. அவர் டுபாய் பயணமாவதற்கு அண்மையில் உள்ள ஒரு நாட்டுக்கு சென்றுள்ளதாகவே சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஆனால் அது எந்த நாடு என தெரிவிக்கவில்லை. அது ஜனாதிபதி கோட்டாபயவின் பாதுகாப்புகளுக்காக இருக்கலாம்.

ஆனால் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.