ஜனாதிபதி ஆசனத்துக்கு சஜித்தின் பெயரைப் பரிந்துரைக்கத் தீர்மானம்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாகும் ஜனாதிபதி ஆசனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் பெயரைப் பரிந்துரைப்பதற்கு பிரதான எதிர்க்கட் சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வழிமொழிந்துள்ளார். இதற்குக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைகளை உயர்த்தி ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி புதிய ஜனாதிபதிக்காக நாடாளுமன்றத்தில் பெயர் பரிந்துரைகளைக் கோரும்போது சஜித் பிரேமதாஸவின் பெயர் ஐக்கிய மக்கள் கட்சியினரால் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் புதிய ஜனாதிபதி ஒருவரின் பெயரைப் பரிந்துரைக்க ஆராய்ந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.