சர்வகட்சி அரசில் கூட்டமைப்பு பங்காளியாக இருக்க முடியாது.

“நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமையில் சரியானதொரு இடைக்கால சர்வகட்சி அரசு அமையுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து ஆதரவு வழங்கலாம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. தெரிவித்தார்.
சர்வகட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுக்குமா என்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இடைக்கால சர்வகட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது தொடர்பில் இதுவரை கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளிடையே முறையான கலந்துரையாடல் நடைபெறவில்லை.
நாம் சர்வகட்சி அரசில் பங்காளியாகாமல் வெளியில் இருந்து ஆதரவு வழங்கலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும். அதற்காக சரியானதொரு சர்வகட்சி அரசு அமையவேண்டும். அதற்காக நாம் அவர்களுடன் பங்காளிகளாக முடியாது” – என்றார்.