கோட்டாவின் நெருங்கிய சகாவான தென்மாகாண ஆளுநர் இராஜினாமா.

தென்மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே இன்று ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்ததையடுத்துத் தானும் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார் என்றும் விலி கமகே குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய சகா என்பது குறிப்பிடத்தக்கது.