கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் கடிதம்

கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடிதத்தில் ஜூலை 13 ஆம் தேதி , அதாவது நாளைய தினத்தை குறிப்பிட்டு கையெழுத்திடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இதன்படி ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து சபாநாயகர் நாளை அறிவிப்பார்.