ராஜபக்ஷ விமான நிலையத்திலும் , ராஜபக்ஷவினருக்கு பிரச்சனை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட 17 பேர் இன்று மத்தளை விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியலில் இருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

உகண்டாவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் வெளிநாடு செல்ல உள்ளதாகவும், விமானப்படையின் பெல் 12 ஹெலிகாப்டரில் மத்தளை விமான நிலையத்திற்கு பயணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முக்கிய வர்த்தகர்கள் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

தற்போது மத்தளை விமான நிலையத்தை சுற்றி மக்கள் கூடி வருவதாக அப்பகுதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாட்டின் சட்ட அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் மூலம் பயணத் தடை விதிக்கப்படாத எந்தவொரு நபருக்கும் சட்டப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேற உரிமை உண்டு.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளுடன், மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் குடிவரவு அதிகாரிகளும் தமது கடமைகளை விட்டு விலக தீர்மானித்துள்ளனர்.

இந்த தீர்மானத்துடன், மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர் முனையத்தில் பிரமுகர் அனுமதி வழங்கப்பட மாட்டாது என குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் இன்று (12) நள்ளிரவு 12.00 மணி முதல் விஐபி அனுமதி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (12) அதிகாலை நாட்டை விட்டு வெளியேற பசில் ராஜபக்ஷ மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. அதற்கு காரணம் விமான நிலையத்தில் அவர் எதிர்கொண்ட கடும் எதிர்ப்புதான்.

பசில் ராஜபக்ஷ புறப்படத் தயாராகிவிட்டார் என்ற செய்தியுடன், விமான நிலையத்தில் பணிபுரியும் குடிவரவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமது கடமைகளை விட்டு விலக தீர்மானித்தனர்.

தற்போது கிடைத்த செய்தி
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பல முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக வெளியான தகவலையடுத்து, மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) குடிவரவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமையை விட்டு  வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தி முன்னாள் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.