நாளை பதவி விலகாவிடின் முழு நாடும் முற்றாக முடங்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாளை பதவி விலகாவிடின் நாளைமறுதினம் முதல் நாடு தழுவிய ரீதியில் நிர்வாக முடக்கல் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர் வசந்த சமரசிங்க கடுமையாக எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்குக் கிடையாது எனவும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் தலைவர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.