ஜனாதிபதி மாலைதீவுக்கு ; விமானப்படையின் அறிவிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதுதொடர்பான அறிவிப்பை இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பில் ,
ஶ்ரீலங்கா அரசியல் யாப்பின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவருக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டு , பாதுகாப்பு அமைச்சின் அனுமதியோடு கட்டுநாயக்க குடிவரவு குடி அகல்வு மற்றும் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலதீவு வரை செல்வதற்கு விமானப்படையின் விமானமொன்று
2022 யூலை 13ம் திகதி அதிகாலை வழங்கப்பட்டுள்ளது.விமான படை ஊடக இயக்குனர்
என குறிப்பிடப்பட்டுள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சென்றவர்களது விபரம்:
* Nandasena Gotabaya Rajapaksa
* Ayoma Udeni Rajapaksa
* Mahinda Ranasinghe of Ranasinghe Mudiansela
* Madhura Sanjeeva of Wickramaratne Kodagoda