கோட்டாவின் விலகல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை! – சபாநாயகர் அறிவிப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜிநாமாக் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை ஊடகங்களிடம் தெரிவித்தார்.
எனினும், இன்று மாலைக்குள் ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைக்கும் என்று தான் நம்புகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பவற்றைக் கடந்த 9ஆம் திகதி போராட்டக்காரர்கள் கைப்பற்றிய பின்னர் அன்றிரவு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சபாநாயகர், கோட்டாபய ராஜபக்ச ஜூலை 13ஆம் திகதி (இன்று) பதவி விலகுவார் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.