உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு மற்றும் அவசரகாலச் சட்டம்

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தீவு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் நபர்களை கைது செய்யவும் , அவர்கள் பயணிக்கும் வாகனங்களை வாகனப் பாதுகாப்புப் காவலில் வைக்குமாறும், பதில் ஜனாதிபதி என்ற வகையில், ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்புப் படையினருக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.